Thursday, 18 March 2021

Vacancy for Co-operative officer - Class III


திறந்த போட்டிப் பரீட்சை - 2021

கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர், தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு - வட மாகாண சபை..!

வயதெல்லை:

விண்ணப்பதாரி விண்ணப்பத்தை ஏற்கும் இறுதித் திகதியன்று 18 வயதிற்கு குறையாதவராகவும், 30 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பொதுவான தகைமைகள் :-

  1. விண்ணபப் தாரி இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும். 
  2. விண்ணபப் தாரி வடக்கு மாகாணத்தின் எப்பாகத்திலும் கடமையாற்றக் கூடிய சிறந்த தேகாரோக்கியமும் உள்ளவராக இருத்தல் வேண்டும் என்பதுடன் சிறந்த நன் நடத்தையும் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
  3. அ) விண்ணப்பதாரி வடக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்டவராக இருத்தல் வேண்டும். இவ் விண்ணப்ப முடிவுத்திகதிக்கு முன்னா் உள்ள ஆறு (06) ஆண்டு காலப்பகுதியில் ஆகக் குறைந்தது மூன்று (03) ஆண்டுகளாயினும் வடக்கு மாகாணத்தில்  தொடாச்சியாக வசித்திருத்தல் வேண்டும். அல்லது ஆ) விண்ணப் தாரா் அல்லது பெற்றோர் வடக்கு மாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருப்பதுடன் ஆகக் குறைந்தது ஐந்து (05) வருடங்கள் வடக்கு மாகாணத்தில் தொடரச்சியாக வசித்திருத்தல் வேண்டும் (நேர்முகப் பரீட்சையின் போது தமது தேருநர் இடாப்பின் உறுதிப்படுத்தப்பட்ட பிரித்தெடுப்பிதழை சமர்ப்பித்தல் வேண்டும்)

கல்வித் தகைமைகள்

விண்ணப்பதாரி க.பொ.த (சா.த) பரீட்சையில் ஒரே அமர்வில்  தமிழ், சிங்களம், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்திகளுடன் ஆறு (06) பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும். 
   அத்துடன்
விண்ணபப் தாரி க.பொ.த (உ.த) பரீட்சையில் பொருளியல், விவசாயம், இணைந்த கணிதம், கணக்கியல், வணிக புள்ளிவிபரவியல் மற்றும் வணிகக் கல்வி ஆகிய பாடங்களில் ஒரு பாடம் உள்ளடங்கலாக மூன்று (03) பாடங்களில் (பொது வினாத்தாள் நீங்கலாக) ஒரே அமர்வில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். (பழைய பாடத்திட்டமாயின்  ஓரே அமர்வில் மூன்று (03) பாடங்கள் சித்தியடைந்திருத்தல் போதுமானதாகும்)

விண்ணப்ப முடிவுத் திகதி : 31.03.2021

திறந்த போட்டிப் பரீட்சை :  நவம்பர் 2021

பதிவிறக்குதல்:
விண்ணப்ப படிவங்களை Sun British College இலும் பெற்றுக் கொள்ளலாம்.
Sun British College, No. 28, Station Road, Vavuniya. Tel: 0766990050
Share:

WhatsApp Chat

Internship Programme

Apply for internships

Verify Certificates

Like our Facebook Page

Video of the day

Pay Online with PayPal

- Get your Admission Now
- Pay your Course Fee
- Register for AAT Course
- Book for Mobile Phone Repairing Course
- Register for Education Faculty Courses
      (Diploma, B. Ed, M. Ed)

View your cart to check out.

News Archive

Accreditions